’20’ வரைவு விவகாரத்தால் ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதே விமலின் இலக்கு.

’20’ வரைவு விவகாரத்தால் அரசுக்குள் மோதல்

ராஜபக்சவினரை வீட்டுக்கு
அனுப்புவதே விமலின் இலக்கு

– இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குற்றச்சாட்டு

“அமைச்சர் விமல் வீரவன்ச என்பவர் ஒரு பாரிய மோசடியாளர். ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதுதான் அவரது அடுத்த இலக்கு.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“விமல் வீரவன்சவை விடப் பெரியவர்கள் ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்தார்கள். அது முடியாமல் போனது. எனவே, விமல் வீரவன்ச கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்” – என்றுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரைச் சார்ந்த சிங்கள தேசிய அமைப்புகள் 20ஆவது திருத்தச் சட்டம் மற்றும் பஸில் ராஜபக்ச தரப்பினரைக் கடுமையாக விமர்சித்து வருவதுடன் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகும் யோசனையையும் எதிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக ஆளும் கட்சிக்குள் விமல் வீரவன்சவுக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.