குவைத் கண்ணீர் ” பானையிலிருந்து நெருப்பில் வீழ்ந்த இலங்கையர்”

“சாப்பிட – குடிக்கவும் இல்லை. கையில் பணமும் இல்லை. நாங்கள் ஐந்து பேர் ஒரு கராஜில் தூங்குகிறோம். ”

” ஒன்று வீட்டிற்குச் செல்லுங்கள் … அல்லது தூதரகத்திற்குச் செல்லுங்கள் என குவைத்காரர்கள். துரத்துகிறார்கள்.”

“நாங்கள் இப்படி தவித்து போன போது , ​​இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரி எங்களுக்கு உதவினார். ஏழு பேருக்கு மூன்று மாதங்களுக்கு மேல் சாப்பிட தருகிறாள். ”

குவைத்தில் வசிக்கும் இலங்கையின் ஒரு குழு பிபிசி சிங்கள சேவைக்கு பேசிய கண்ணீர் கதைதான் இவை.

அவர்கள் வேலைகளை இழந்து , வீடற்றவர்களாகி , பொது மன்னிப்பு காலத்தில் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் தமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏப்ரல் மாதத்தில், சட்டவிரோதமாக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொதுவான காலக்கெடுவை குவைத் அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, சரணடைதல் ஏப்ரல் 21 முதல் 25 வரை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்படி சரணடைந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை மற்றும் குவைத் அரசாங்கத்தால் இலவச விமான பயணம் வழங்கப்பட உள்ளதாக குவைத் அரசு தெரிவித்தது. அப்படி செல்வோர் எந்தவொரு தடையும் இல்லாமல் மீண்டும் குவைத் திரும்புவதற்கான சிறப்பு வாய்ப்பும் உள்ளது.

சரணடைந்தவர்கள் ” பானையிலிருந்து நெருப்பில் வீழ்ந்தவர்கள் ஆனார்கள்”

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும், இலங்கைக்குத் திரும்பவும் என சரணடைய பலர் குவைத், பர்வானியா சிறுவர் மற்றும் பெண்கள் பள்ளிகளுக்கு சென்றனர். ஆனால் விசா இல்லாமல் காத்திருப்பவர்களின் பாஸ்போர்ட் இருந்தோரை மட்டுமே குவைத் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லை. குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்குச் சென்று தற்காலிக பாஸ்போர்ட்டைக் கொண்டு வரும்படி அவர்களிடம் கூறப்பட்டது, ஆனால் பொது மன்னிப்பு காலத்தின் போது அந்த தேவையை பூர்த்தி செய்ய காலமில்லை.

“பர்வானியா பள்ளிக்கூடத்தில் எம்மை ஏற்காததால் நாங்கள் தூதரகத்திற்குச் சென்றோம். அவர்களும் எம்மை ஏற்கவில்லை. பின்னர் போலீசார் வந்தனர். நாங்கள் சாலைகளில் ஓடி, தப்பிப்பிழைத்தோம். இப்போது இருக்க இடமும் இல்லை. நாங்கள் இருந்த இடங்களிலும் ஏற்கிறார்கள் இல்லை. “வீட்டிற்குச் செல்லுங்கள் … அல்லது தூதரகத்திற்குச் செல்லுங்கள்” என்று குவைத் மக்கள் எம்மை நோக்கி கத்துகிறார்கள். குவைத்தைச் சேர்ந்த விஜித பஸ்நாயக்க பிபிசி சிங்கள சேவைக்கு இப்படி தெரிவித்தார்.

குவைத்தில் உள்ள ஏ.எச்.டி ரேணுகாவிடம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இது குறித்து கேட்டீர்களா என பிபிசி சிங்கள சேவை கேட்ட போது …

“எங்களுக்கு வேலை இல்லாமல் மூன்று மாதங்களாக நடுத் தெருவில் நிற்கிறோம். எங்களுக்கு சாப்பிடக் கூட இல்லை. ஐந்து காசு கூட கையில் இல்லை. அப்பாவியான நிலையில் உள்ள எங்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துத்துச் செல்லுங்கள் என ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ” என்றாள்.

குவைத்தில் இருக்கும் ஏழு பெண்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கோரினர். அவர்கள் …

“நாங்கள் போனபோது, ​​இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரி எங்களுக்கு உதவினார். எங்களில் ஏழு பேருக்கு மூன்று மாதங்கள் சாப்பிடுவதற்கு அந்த சகோதரிதான் தருகிறார். எங்கள் தற்காலிக பாஸ்போர்ட்களை தந்தால் விரைவில் இலங்கைக்கு திரும்ப முடியும் . இங்கு நோய்க்கு சிகிச்சை கூட இல்லை.” என்றார்கள்.

“தூதரகத்திற்கு வருவதைத் தவிர்க்கவும்”

இலங்கைக்கு திரும்ப விரும்புவோருக்கு குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஜூன் 1 ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விசாக்கள் மற்றும் பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட்களை வழங்குவது அல்லது பதிவு செய்வது இன்னும் தொடங்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தூதரகத்தின் பேஸ்புக் கணக்கு மூலம் அவர்களை தூதரகத்திற்கு வரக்கூடாது என அதில் தெரிவித்துள்ளது.

நன்றி: பீபீசி சிங்கள சேவை

Comments are closed.