வடமாகாண ஊடகவியலாளர் சங்கம் முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடந்த சில நாட்களுக்கு முன் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரவெட்டுவது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாண ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், சட்ட விரோத மரம் வெட்டுவதை தடுக்குமாறும்,ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் பக்கசாரபு இன்றி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மரம் ஒன்றும் மகஜரும் கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கும் மகஜர் கையளிக்கப்பட்டு மரம் ஒன்றையும் கையளித்தனர்.

பின் முள்ளியவளையில் உள்ள வனவள திணைக்களத்திற்கு சென்று அங்கும் மரம் ஒன்றும் மகஜரும் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.