இலங்கையில் இன்றும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவல் மூலம் இலங்கையில் இன்றும் 110 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 38 பேரும், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களில் 72 பேருமே கொரோனாத் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலின் எண்ணிக்கை 1,907ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது. அதில் 3 ஆயிரத்து 385 பேர் குணமடைந்துள்ளனர்.1,956 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.