06. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்  – வெற்றிச் செல்வன்

 

பகுதி 06

நான் தொடரை எழுதும் போது முகமறியா சில தோழர்கள் நான் என்னை முன்னிலைப்படுத்தி எழுதுவதாக வசை பாடினார்கள். அவர்களது கருத்துக்களை எடுத்து விட்டேன், நான் நேரடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தான் எழுதுகிறேன். நான் கேள்விப்பட்ட செய்திகளை இத்தொடரில் எழுதமாட்டேன் நான் கேள்விப்பட்ட செய்திகள் நிகழ்ச்சிகளைபின்பு எழுதுவேன்.

எமது  தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்பு சந்ததியார் வந்து இங்கு அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். நான் எனது நாலாவது பதிவில் குறிப்பிட்டது போல் சந்ததியாரைபற்றிய தகவல்கள் இந்தப் பதிவில் தான் வரவேண்டும். சந்ததியார் தனது கட்டுப்பாட்டில் என்னையும் மாதவன் அண்ணாவையும் வைத்திருந்தார்.

சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய அரசியல்வாதிகளை பார்க்கப் போகும்போது என்னைஅல்லது மாதவன் அண்ணாவை கூட்டிப் போவார். ஒரு நாள் சந்ததியார் இலங்கையில் இருந்த விமானத்தில் வந்த ஜான் மாஸ்டரை கூட்டி வந்தார் எங்களிடம் இதான் மாஸ்டரை காட்டிமருத்துவக்கல்லூரி மாணவர் கழகத்தின் முக்கிய ஒருவர் எனக் கூறினார். நாங்கள் சந்தோஷப்பட்ட அளவுக்கு ஜான் மாஸ்டர் எங்களுடன் பழகவில்லை. எங்களை முட்டாள் போராளிகள் மாதிரிதான் பார்த்தார்.

ஆனால் சந்ததியார் அப்படி அல்ல. தவறு என்றால் கடுமையாக கண்டிப்பாய் இருப்பார். சில வேலைகளை நாங்கள் திறமையாக செய்யும்போது எங்களை மிக மகிழ்ச்சியாக தட்டிக் கொடுப்பார். சந்ததியார் உடன்பழகும்போது எச்சரிக்கையாக இருப்போம்.

துரையப்பா கொலை வழக்கில் சந்ததியார் சிறை சென்று மீண்டு வந்த பின்பு எழுபத்தாறு ,77ஆம் ஆண்டு காலங்களில் மானிப்பாய் நவாலியில் அவரும் இன்பமும் சேர்ந்து இரவு ரகசிய வகுப்புகள் எடுப்பார்கள். நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த வகுப்புகளில் எமது தோழர் பார்த்திபனும் கலந்து கொண்டதை நானும்பார்த்திருக்கிறேன். பார்த்திபன் உம்மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் தான்.

அக்கால கட்டங்களில் வழக்கு சம்பந்தமான எல்லா வேலைகளையும் எமது தோழர் கணபதி என்கிற விக்கி பார்த்துக் கொண்டார். நிரஞ்சன் கண்ணன் எக்மோர் கோர்ட்டிலும், உமா மகேஸ்வரன் வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்தது. அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு நடத்தியவர் புகழ்பெற்ற இடதுசாரி சிந்தனைகள் உள்ள வழக்கறிஞர் என் டி வானமாமலை அவர்கள். வழக்கு நடக்கும்போது எங்களிடம் இருந்து ஒரு பைசா பணமும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் போகும்போது தோழர் கணபதி காரை ஏற்பாடு செய்து கூட்டிக்கொண்டு போய் வருவார் கணபதி போக நேரம் ஆகிவிட்டால் தனது காரிலேயே போய்விடுகிறார் அதற்காக எங்களிடம் காசு கூட கேட்பதில்லை. எம் ஜி ஆர் எம் ஆர் ராதா சுடப்பட்ட வழக்கில் எம் ஆர் ராதா வுக்கு ஆதரவாகஆஜராகி வழக்குநடத்தியவர். இவரைப் போன்றவர்கள் மிக அபூர்வமான மனிதர்கள். வேறு பல அரசியல்வழக்கறிஞர்கள் உமா பிரபா வழக்கில் உதவி செய்வதாக கூறிபணம் பார்த்த விடயமும் உண்டு.

ஓரத்த நாட்டைச் சேர்ந்த இளவழகன், ராமசாமி , தமிழ்மணிபோன்றவர்களும் எம்மோடு ஓடி திரிந்தார்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் ஐயா தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என கேட்டு ஆதரவு திரட்டினார். தஞ்சாவூரை சேர்ந்த  இரா.இரத்தினகிரி கால்நடை மருத்துவரும், திராவிடர் கழக பகுத்தறிவாளர்சங்கத் தலைவருமாக இருந்தவர்.

சந்ததியாரையும் என்னையும் அழைத்துப் போய் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இடம்அறிமுகப்படுத்தினார் அப்போது திராவிடர் கழக வருடாந்த மாநாடு நடக்க இருந்தது 1983 ஆண்டு மே மாதம் ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்.

அந்த மாநாட்டில் இவர்களை விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றுவதாக பெரியவர் வீரமணி அய்யா கூறினார் அதோடு மாநாடு ஊர்வலத்திலும் மாநாட்டிலும் வைக்க, பிடிக்க அட்டைகள் தயாரித்து தரும்படி சொன்னார். மாறனும் உடனடியாக உமா மகேஸ்வரன், கண்ணன், நிரஞ்சன் விடுதலை செய். விடுதலைப் புலிகளை விடுதலை செய். நாடு கடத்தாதே விடுதலைப் போராளிகளை. இந்திய அரசே தமிழ் ஈழத்தை ஆதரிக்க வேண்டும். போன்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான அட்டைகளை  கொடுக்க நாங்களும் அதை திராவிடர் கழகத் தோழர்களிடம் கொடுத்தோம்கொடுத்தோம்.

மாநாட்டுக்கு கலந்துகொள்ள வந்த கோவை ராமகிருஷ்ணன் என்ற இளைஞரை எமது வீட்டுக்கு அழைத்து வந்து ரத்தினகிரி அறிமுகம் செய்து வைத்த அந்த இளைஞர் ராமகிருஷ்ணன் மிக ஆர்வமாக இலங்கை அரசுக்கு எதிரான போட்டோக்கள் செய்திகள் இருந்தால் கேட்டார் ஆனால் சந்ததியார் தட்டிக் கழித்து விட்டார் பின்பு தருவதாக. பின்பு சந்ததியார் இடம் காரணம் நான் கேட்டபோது, இவர்களை எல்லாம் நாங்கள் ஆதரிக்க கூடாது எங்கள் படங்களை வைத்து இவர்கள் கண்காட்சிகள் வைத்து பணம் சம்பாதித்துக் கொள்வார்கள் எனக் கூறினார்.

நாங்கள் தவறவிட்ட அந்த சந்தர்ப்பத்தை விடுதலை புலிகள் குறிப்பாக பேபி சுப்பிரமணியம் பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் சுற்றிச் சுழன்று தமிழ்நாடு முழுக்க விடுதலைப்புலிகளை ஆதரித்தும் பணமும் சேகரித்தும் கொடுத்தார்  அவர் தனது திறமையால் விடுதலைப்புலிகளுக்கு நினைத்துபார்க்க முடியாதஉதவிகளைச் செய்து கொடுத்தார்.

இன்றும்அவர் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துவார். பெரியார் திடலில் முதன்முதலில் பேபி சுப்பிரமணியத்தை (பிற்காலத்தில் இவர் இளங்குமரன் விடுதலைப்புலிகளின் கல்வி பொறுப்பாளராக இருந்தார் என நினைக்கிறேன்) தூர இருந்து மாறன் காட்டினார். ஒரு பையுடன் வந்த பேபி சுப்ரமணியம் தனியாக ஒரு இடத்துக்குப் போய் தான் போட்டிருந்த பேன்ட் சட்டையை கழட்டி மடித்து பையில் வைத்து விட்டு பையிலிருந்து ஒரு கசங்கிய அழுக்கான வேட்டி, சட்டையை எடுத்துஅணிந்துகொண்டு திராவிடர் கழக தலைவர்களை சந்திக்க போவார்.

திராவிடர் கழக மாநாடு நடக்கும் நாள் பெரியார் திடலில் நானும் கந்தசாமியும் எமது புத்தகங்கள், இலங்கை அரசுக்கு எதிரான புத்தகங்கள், காந்தளகம் வெளியீடுகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்தோம். நமக்கு அருகில், இன்று திராவிடர் கழக வழக்கறிஞர் அணி தலைவராக இருக்கும் திருமதி அருள்மொழி என்பவர் சிறுமியாக அவரின்தாயுடன் திராவிடர் கழகம் பெரியார் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

ரத்தினகிரி அவர்களிடம் விற்பனையில் எங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். பகல் 2 மணிக்கு போல் ஊர்வலம் தொடங்கியது. எமதுநூற்றுக்கணக்கான அட்டைகள் பொதுமக்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தன மத்திய மாநில உளவுத் துறை அதிகாரிகள் போட்டோ எடுத்து குறிப்புகள் எடுத்தார்கள்.

சென்னை மெரினா பீச்சில் மிகப் பெரிய மாநாடு நடக்க இருந்தது. ஆனால் ஊர்வலம் மெரினா கடற்கரையைநெருங்கியதும் பெரியமழை பிடித்துக் கொண்டது மழையில் நனைந்து கொண்டே எல்லோரும் திரும்ப பெரியார் திடலுக்கு ஓடினோம் அங்கு இரவு 12 மணி வரை மாநாடு நடந்தது நமக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடரும் ………..


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.