ஜனாதிபதி கோட்டாபய கடிந்து பேசியது அதிகாரிகளை அல்ல : மஹிந்த ராஜபக்ஷவை – அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடினமான வார்த்தை பிரயோகங்கள் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களை நோக்கி அல்ல, அது நிதி அமைச்சராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி தாக்கியது என ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

“வழக்கமாக, ஜனாதிபதி எந்தவொரு நிறுவனத்தையும் அழைக்கும் போது, ​​அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சரையும் வரவழைக்க வேண்டும். இப்போதைய அரசின் , நிதி தொடர்பான அதிக அதிகாரம் இருப்பது ஜனாதிபதிக்கு அல்ல, நிதி அமைச்சராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் , பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கேயாகும் . நிதி தொடர்பாக நிதி அமைச்சர்தான் நிதி தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளை வெளியிட வேண்டும்.

எனவே, நிதி அமைச்சர் இல்லாமல் அதிகாரிகளை அழைத்து கண்டிப்பது நியாயமில்லை என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை இது நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மறைமுக குற்றச்சாட்டு என நினைக்கிறேன். ஏனென்றால், அவரது அதிகார எல்லைக்குட்பட்ட ஒரு நிறுவனம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ என, எனக்குத் தெரியாது. ஆனால் ஜனாதிபதி அவர் இல்லாமல் அவருக்கு கீழ் செயல்படும் அதிகாரிகளை கண்டிப்பதென்பது அவர் மீதான தாக்குதலாகவே கருதப்படுகிறது.

அவரது இதுபோன்ற சத்தங்களை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். சந்தைக்குச் சென்று அரிசி பற்றி ஒரு முறை ஒரு சத்தம் போட்டார். அப்போது அரிசி மாஃபியா உடைந்து விடும் என நினைத்தார். இலங்கை வங்கி அதிகாரிகளையும் அழைத்து சத்தம் போட்டார். ஆர். எம். விக்குச் சென்றும் சத்தம் போட்டார். ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அனைத்து ஊடகங்களையும் வரவழைத்து அவர்கள் முன் அதிகாரிகளைக் கண்டிப்பதல்ல என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும், ”என்றார்.

தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று (17) வெளியே வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இப்படி பதிலளித்தார்.

Comments are closed.