முற்போக்குக் கூட்டணியில் இருந்து அரவிந்குமார் எம்.பி. இடைநிறுத்தம் : மனோ

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமாரைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

ருவிட்டர் பதிவொன்றில் மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து அரவிந்குமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளேன். இன்று கூடும் த.மு.கூ. நாடாளுமன்றக் குழு இது தொடர்பில் ஆராயும்” என்று மனோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அரவிந்குமார் தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் மனோ அறிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டக்கு எதிராக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்கள் வாக்களித்திருந்த நிலையில், அரவிந்குமார் மட்டும் ஆதரவாக வாக்களித்தார்.

Leave A Reply

Your email address will not be published.