அமெரிக்கா காரணமின்றி வரிகளை விதிக்கிறது – குமுறும் சீனா.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) அமெரிக்கா காரணமின்றி வரிகளை விதிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவும் சீனாவும் பங்காளிகளாவதற்கு முழு வாய்ப்புள்ளது என்றார் வாங். ஒன்று மற்றொன்றை வளப்படுத்தவும் வெற்றி பெறச் செய்யவும் வழி பிறக்கலாம் என்றார் அவர்.
ஆனால் அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்குச் சீனா முறையான விதத்தில் பதிலளிக்கும் என்று வாங் சொன்னார். ஊடகங்களுக்கு அளித்த தகவலில் அவர் ரஷ்ய-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அனைத்துலகச் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால் சீன-ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படமாட்டா என்றார் அவர். மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலைத்தன்மையைக் கோரிய திரு வாங், அரபு நாடுகள் காஸாவுக்கு வகுத்துள்ள திட்டங்களுக்கு ஆதரவளித்தார். காஸா வட்டாரம் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமானது என்று அவர் சொன்னார்.