முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்து குறித்து விசாரணை – நாமல் ராஜபக்ஷ

முன்னாள் விளையாட்டுத்துறை மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது போன்ற குற்றச்சாட்டுகள் பாரதூரமானவையென சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ஷ, நாங்கள் நேசிக்கும் கிரிக்கட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என டுவிட்டர் செய்தியில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பற்ற முறையில் உரிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைகள் குறித்தான முன்னெடுப்புக்களை துரிதப்படுத்துமாறும் I.C.C மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினை கேட்டுக்கொள்வதாகவும் அவர், டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.