யேமன் மீது அமெரிக்காவின் கொடிய தாக்குதல்: 38 பேர் பலி, 102 பேர் படுகாயம்!

நேற்று முன்தினம் (17) யேமனின் ராஸ் ஈசா எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தும், 102 பேர் காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் குறித்து ஹூதி ஊடகங்கள் தெரிவிக்கையில், அமெரிக்க படைகள் நாட்டிற்கு எதிராக நடத்திய மிகக் கொடிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளன.
தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் கூறுகையில், வான்வழித் தாக்குதல்கள் மூலம் பிற குடிமக்களை சுரண்டி அவர்களுக்கு பெரும் வேதனையை அளிக்கும் ஹூதிகளின் பொருளாதார பலத்தை குறைப்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ளது.