அமெரிக்கா ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போடும் : சீன தூதரகம் ட்விட்

ஒரே நேரத்தில் இரட்டை வேடங்களை போடுவதை அமெரிக்காவால் செய்ய முடியும் என்று இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது

தங்களது ட்விட்டர் கணக்கில் ஒரு அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் அழைப்பின் பேரில் Aliens Vs Predator விளையாட்டில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும், அதற்காக மன்னிப்பு கோரியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் இலங்கை-சீனா உறவுகளையும் நட்பையும் வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று அவர்களது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

Update news

இலங்கையுடனான இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களைப் போடுகின்றது எனக் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையை சீனா வேட்டையாடுகின்றது என்று இன்று கொழும்பில் வைத்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனத் தூதரகம் ருவிட்டரில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தனது 2 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்
கொண்டு கொழும்பில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்டுள்ளார்.

முன்னதாக கொழும்பில் இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ, சீனா ஒரு வேட்டையாடும் நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுகின்றது என்றும் கூறினார்.

அமெரிக்கா ஒரு நண்பராகவும் பங்காளியாகவும் இருந்து வருவதாகவும், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இலங்கையுடனான கூட்டணியை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள ருவிட்டில், “இலங்கை நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருக்கின்றோம். உங்கள் AlienVsPredator விளையாட்டு அழைப்பில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா எப்போதுமே ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.