பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஹரிணி அன்டிகுவாவுக்குப் பயணம்.

அன்டிகுவா மற்றும் பார்புடாவின் செயிண்ட் ஜோன்ஸ் நகரில் நடைபெறவுள்ள 28 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அன்டிகுவா நோக்கிய தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின்போது, பிரதமர் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன், உறுப்பு நாடுகளுக்கிடையிலான பொது நலன் சார்ந்த விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.