யாத்திரை சென்ற பஸ் விபத்து! 20 பேர் வைத்தியசாலையில்!!

யாத்திரை சென்ற தனியார் பஸ் வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி, அலதெனிய – யடிஹலகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.