அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் பலி!

அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் இந்திய இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

சாலை விபத்தில் பலியான இளைஞர்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள Lancaster நகரில் மூன்று பேர் காரில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், அந்தக் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில், காரில் பயணித்த சௌரவ் பிரபாகர் (23) மற்றும் மானவ் பட்டேல் (20) என்னும் இரண்டுபேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.

அவர்கள் இருவரும் Cleveland மாகாண பல்கலையில் பயின்றுவந்த மாணவர்கள் ஆவர். காரில் பயணித்த மற்றொரு நபர் காயங்களுடன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், அவர்கள் பயணித்த கார் மரம் ஒன்றில் மோதி பின் பாலம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது மட்டும் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விபத்து குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள நியூயார்க்கிலுள்ள இந்திய தூதரகம், அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.