தொழில் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலராஜா மறைவு!

பிரபல சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற தொழில் நீதிமன்ற நீதிபதியுமான வேலாயுதம் விமலராஜா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 90ஆவது வயதில் நேற்று காலமானார்.

யாழ். வடமராட்சி, கரவெட்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட விமலராஜா கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.

அவரது இறுதிச்சடங்கு நாளை வியாழக்கிழமை சிட்னி நகரில் நடைபெறும் என்று குடும்பத்தவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.