கடலூர் சிப்காட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கழிவுநீர் டேங்க் திடீரென வெடித்தில் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் சிப்காட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கழிவுநீர் டேங்க் திடீரென வெடித்தில் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

முதுநகர் அருகே உள்ள குடிகாடு என்ற பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் கழிவுநீரை சேமித்து வைத்து சுத்திகரிக்கும் சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்று உள்ளது.

இந்த நிலையில், சாயத் தொழிற்சாலையில் கழிவுநீரை சேமித்து வைத்து சுத்திகரிக்கும் ராட்சத டேங்க் வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பயங்கர சப்தத்துடன் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.


பயங்கர சப்தம் கேட்டதால் வேலையில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இந்த கவிவுநீர் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ராட்சத கழிவுநீர் டேங்க் வெடித்ததில் கழிவுநீர் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.