மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜயபுர, தமனேவெல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.
மேற்படி நபர் வயலில் நெல் விதைக்கும் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.