செட்டிகுளத்தில் யானை தாக்கி ஒருவர் மரணம்.

வவுனியா, செட்டிகுளம், கன்னாட்டி – கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு அவரின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கன்னாட்டி – கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பா.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.