100 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் சிக்கினர்.

அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
101.47 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.