இங்கிலாந்தில் மக்கள் மீது சிற்றூர்ந்து மோதியதில் 27 பேர் காயம்!
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடத்தப்பட்ட வெற்றி அணிவகுப்பின் போது மக்கள் மீது சிற்றூர்ந்து மோதியதில் 27 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இங்கிலாந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்ற நிலையில், அதில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து அந்த அணியினர் நேற்று லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பை நடந்தினர்.
கைது செய்யப்பட்டவரின் விவரம்
தொடர்ந்து வெளியான காவல்துறை அறிக்கையில், கைது செய்யப்பட்டவர் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது வெள்ளையர் பிரிட்டிஷ் ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பாதசாரிகளின் நிலை குறித்து இன்னும் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை, மேலும் அவசர சேவைகள் இன்னும் சம்பவ இடத்திலேயே உள்ளன.
இந்த விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
