இரத்மலானை – பலாலி விமான சேவை இரு வருடங்களின் பின்னர் வழமைக்கு.

இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையத்துக்கு இடைடயிலான சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது.

இதனடிப்படையில் இந்தச் சேவையை ஆரம்பிக்கும் முகமான தகுதிகாண் விமான சேவை டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தபட்ட விமான சேவையானது மீண்டும் டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தின் மூலம் இலங்கை விமான சேவைகள் அதிகார சபைக்கு விண்ணப்பிக்கபட்ட விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முகமாகத் தகுதிகாண் சேவை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கப்டன் தமிந்த றம்புக்வெல பிரதி தலைமை அதிபதி இலங்கை விமான சேவைகள் அதிகார சபை பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்தார்.

குறிப்பாக இரண்டு வருடங்களின் பின்னர் இந்தச் சேவை ஆரம்பிக்கப்படுகின்றது. நமது நோக்கம் இலங்கைக்கு இடையில் உள்நாட்டு விமான சேவைகளை வளர்ப்பதாகும் .

அதன் அடிப்படையில் டேவிட் பிரிஸ் குடும்பத்தினராக முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைவாக இன்று தகுதிதான் சேவை பரிசோதிக்கப்பட்டது.

அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளிலும் டேவிட் பிரிஸ் விமான சேவைகள் சித்தி பெற்றுள்ளன. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான கட்டுமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

டேவிட் பிரிஸ் விமான சேவைகள் நிறுவனம் தமது சேவைக்கான விண்ணப்பமாக விளங்குகின்றபோது நாங்கள் அதனை அனுமதிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

இதேவேளை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தின் ஊடாக எந்தவொரு நாட்டுக்கும் இந்த விமான சபையின் ஊடகப் பயணித்து தாங்கள் விரும்பிய சேவையின் மூலம் பயணிப்பதற்கு இந்தச் சேவை வலியுறுத்தும்.” – என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த டேவிட் ஃபீரிஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானி, “இந்தச் சேவையை வாராந்தம் மூன்று நாள்கள் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். இரு வழி கட்டணமாக 68 ஆயிரம் ரூபா அறவிடப்படும். ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும். பயண நேரமானது ஒரு வழிக்கு 1 மணித்தியாலம் 10 நிமிடங்கள் தேவைப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.