ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்கள் பண்டாரவன்னியன் சிலை முன் சத்தியப்பிரமாணம்.
ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகம் அருகாமையில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜனநாயகத் தேசியக் கூட்டணியானது கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.
அந்தவகையில் வவுனியா மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பரமேஸ்வரன் கார்த்தீபன், செட்டிகுளம் பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சங்கரன் சசிக்குமார், இராசரத்தினம் லிங்கேஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வீரசிங்கம் ஶ்ரீதரன் மற்றும் சதாநந்தம் சுகிர்தன் ஆகியோர் தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.

இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலாே) செயலாளர் ப.உதயராசாவின் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருத்தனர்.
