செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது

நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது. இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.