ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம்: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டுப் பெண் உயிரிழப்பு

பெங்களூருவில் நடைபெற்ற RCB வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு பெண் உயிரிழப்பு

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்றது. பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

இதனால் ரசிகர்கள் அதனை உற்சாகமாக கொண்டாடினர். மேலும், பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் கிரிக்கெட் வீரர்களை காண்பதற்கு ரசிகர்கள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஒருவர்.

அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த காமாட்சி தேவி(28) என்பவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

இவரது உடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.