யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தியாகி சிவகுமாரனின் நினைவேந்தல்.

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தியாகி பொன். சிவகுமாரனின் திருவுருவப் படத்துக்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

தியாகி பொன். சிவகுமாரன், தமிழ் மாணவர்களுக்குத் தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்திப் போராடினார்.

அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்டபோது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஈழப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.