முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சீனாவில் இருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை காலை ஆஜராகியிருந்தார்.

அங்கு சஷீந்திர ராஜபக்ஷ ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.