மிரள வைத்த திருப்பம்: ‘கொல்லப்பட்டவர்’ உயிருடன் திரும்பியதால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி விடுதலை!

கொல்லப்பட்டதாக நினைத்த நபர் உயிருடன் திரும்பி வந்ததால் 3 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி விடுதலை
கடந்த 2022-ம் ஆண்டில் டெல்லி – அயோத்தி ரயிலின் டி2 பொதுப் பெட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எடாப் என்ற நபர் வெளியில் தள்ளப்பட்டார். பின்னர், தண்டவாளத்தில் அருகில் கிடந்த உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

இதையடுத்து, அவரை ரயிலில் இருந்து வெளியில் தள்ளிய உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர துபேவை பொலிஸார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கொல்லப்பட்டதாக கருதபட்ட எடாப் அவரது குடும்பத்தினருடன் இருக்கும்படியான வீடியோ அண்மையில் வெளியானது. பின்னர், கடந்த 4-ம் திகதி அன்று எடாப் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனால், கைது செய்யப்பட்ட நரேந்திர துபேவை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் கூடுதல் மாவட்ட நீதிபதி பங்கஜ் குமார் ஸ்ரீவஸ்தவா விடுவித்து விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.