180 மீட்டருக்கு ஓலா புக் செய்த இளம்பெண்: காரணம் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!
பெண் ஒருவர் 180 மீட்டர் தூரம் செல்வதற்காக ஓலா பைக்கை புக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
தற்போதைய காலங்களில் ஒரு இடம் விட்டு மறுபுறம் செல்வதற்கு கார் மற்றும் பைக் டாக்சிகளை புக் செய்கிறார்கள். குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், இங்கு பெண் ஒருவர் அருகில் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கே ஓலா பைக்கை புக் செய்துள்ளார். இதற்கு அந்த பெண் ஒரு காரணத்தையும் தெரிவிக்கிறார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் பெண் ஒருவர் ஓலா பைக்கை புக் செய்துவிட்டு சாலையில் நிற்கிறார். பின்னர், ஓலா பைக் ஓட்டுநர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்கிறார்.
அதற்கு அந்த பெண் அருகில் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். உடனே அந்த டிரைவர் மேப்பில் பார்த்து விட்டு இந்த இடம் 180 மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது, இதற்கு ஏன் புக் செய்தீர்கள் என கேட்கிறார்.
அதற்கு அந்த பெண் அந்த பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் புக் செய்தேன் என்று கூறுகிறார்.
View this post on Instagram
