குரங்குகள் திருடிச் சென்ற 20 லட்சம் ரூபாய் நகை: பல மணி நேர தேடுதலுக்குப் பின் மீட்பு!

ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை பையை குரங்குகள் தூக்கிச் சென்றதால், பல மணிநேர தேடுதலுக்கு பிறகு அதனை மீட்டுள்ளனர்.

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் நேற்று தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அபிஷேக் அகர்வாலின் மனைவி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கைப்பையில் வைத்துள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

இதையடுத்து, அவர்கள் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் கூடியிருந்த குரங்குகள் நகைப்பையை பறித்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நகை பையை தேடினர்.

பின்னர், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பொலிஸார் பல மணிநேர தேடுதலுக்குப்பின் முட்புதரில் இருந்து நகை பையை மீட்டனர். இதையடுத்து, மீட்ட நகை பையை அபிஷேக்கின் மனைவியுடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.