உதயநிதி வருகையால் எழுந்த சர்ச்சை: குடிசைப் பகுதிகள் திரைச்சீலையால் மறைப்பு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையின் காரணமாக திரைச்சீலை போட்டு குடிசைப்பகுதி மறைக்கப்பட்டதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நே சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவிற்கு வருகை தந்திருந்தார்.

அங்கு இருக்கும் 113 தெருக்களில் வாழும் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறந்து வைத்தார்.

உதயநிதி தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் ஒருபுறம் பக்கிங்காம் கால்வாயும், மறுபுறத்தில் குடிசை பகுதியில் வாழும் மக்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இந்த பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையின் காரணமாக குடிசைப்பகுதி திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டது. அதாவது, இந்த பகுதியின் இருபுறமும் திரைச்சீலை அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.