திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி தமிழரசு வசம் – தவிசாளராக வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் தெரிவு.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இன்று மாலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற அமர்வில் தவிசாளருக்கான தெரிவின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் 16 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.எச்.எஸ்.சத்துர லக்மாலைவிட 12 அதிக வாக்குகளைப் பெற்றார்.

இதையடுத்து உப தவிசாளருக்கான தெரிவின் போது சுயேச்சைக் குழு உறுப்பினர் கயிலைநாதன் வயிரவநாதன் 9 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஏ.எல்.எம்.நெளபர் 7 வாக்குகளைப் பெற்றார்.

20 ஆசனங்களைக் கொண்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் முறையே இலங்கைத் தமிழரசுக் கட்சி 6, தேசிய மக்கள் சக்தி 4, ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணி 3, ஐக்கிய மக்கள் சக்தி 2, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1, சுயேச்சைக் குழுக்கள் 3 என்ற வகையில் உறுப்பினர்களைப் பெற்றிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.