யாழில் ஐந்து மாதங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளம் குடும்பஸ்தர் சாவு!

யாழ்ப்பாணத்தில் 5 மாதங்களாக ஊசி மூலமாகப் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மேற்படி கடந்த 5 மாதங்களாக ஊசி மூலமாகப் போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
…………………..

Leave A Reply

Your email address will not be published.