கணேமுல்லவின் நெருங்கிய சகா சுட்டுக்கொலை!
ராகம, படுவத்தைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டோவில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் மேற்படி நபரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், அண்மையில் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான ‘ஆர்மி உபுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிதாரிகளின் அடையாளம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
