களுத்துறையில் கால்வாயில் இருந்து மனித எலும்புக்கூடு ஒன்று இன்று மீட்பு!
தேயிலைத் தோட்டம் ஒன்றில் உள்ள கால்வாயில் இருந்து மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
களுத்துறையில் மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எடகெஹெல்கல்ல வீதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று மத்துகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் எலும்புக்கூடாக இது இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது ஆணா அல்லது பெண்ணா என இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
