நீரில் மூழ்கி மூதாட்டி பலி.
குளத்தில் நீராடிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டி ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
