யாழ். இந்துக் கல்லூரியில் 82 மாணவர்களுக்கு 9 ஏ.
2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
73 மாணவர்கள் 8 பாடங்களிலும், 33 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அதேவேளை, 24 மாணவர்கள் 6 பாடங்களிலும், 20 மாணவர்கள் 5 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 345 மாணவர்களில் 342 பேர் சித்தியடைந்துள்ளனர்.
