தனியார் பஸ் மோதி வயோதிபப் பெண் பலி.

தனியார் பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியில் இருந்து பயணித்த தனியார் பஸ் ஒன்று பஸ் தரிப்பிடத்துக்குள் நுழையும் போது பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்தபெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பெண் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார்.

இந்த விபத்து தொடர்பில் பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.