வவுனியாவில் ரயிலில் மோதி ஒருவர் மரணம்.

வவுனியா ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு நேற்று இரவு ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு தபால் ரயிலிலேயே மேற்படி நபர் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.