உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்: பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது.

நிலந்த ஜெயவர்தனவைப் பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் பணிப்புரையைப் பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளது.

நிலந்த ஜெயவர்தன தனது கடமையைப் புறக்கணித்தார் எனவும், குற்றவியல் குற்றத்தைச் செய்தார் எனவும் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டு வெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்திருந்தது.

அதன்படி, நிலந்த ஜெயவர்தன மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர் செய்த குற்றச் செயலுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.