வெல்லவாயவிலும் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

மொனராகலை – வெல்லவாய, ரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ரந்தேனியவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் இருந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.