திருமலையில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர எனும் பகுதியில் வைத்து யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மூதூர் – மல்லிகைத்தீவச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா வர்ணகுரரெட்ணம் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தோப்பூர் -நாராயணபுரத்தைச் சேர்ந்த யோகராசா (வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி நபர்கள் சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்குத் திரும்புகையிலேயே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் சேருவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்றுபி பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.