இளைஞர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த சம்பவம்.

முன்னாள் கடற்படைத் தளபதி
நிஷாந்த உலுகேதென்ன கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தளபதியாகக் கடமையாற்றிய காலத்தில் குருநாகல் – பொத்துஹெர பிரதேசத்தில் இளைஞர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.