யாழ். விபத்தில் வயோதிபர் பலி!
யாழ்ப்பாணத்தில் வீதியைக் கடக்க முற்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே உயிரிழந்தார்.
முல்லைத்தீவில் இருந்து அச்சுவேலி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வயோதிபர் வந்தார். அவர் கடந்த 27ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
