பொருளாதார நெருக்கடி இங்கு மீண்டும் ஏற்படாது! இடைக்கால ஜனாதிபதி ஒருவர் வரவே மாட்டார்; சபையில் எதிர்க்கட்சிகளுக்கு அநுர நெத்தியடி.

“இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்படும், மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் மறந்து விட வேண்டும். இது எமது ஆட்சி. இடைக்கால ஜனாதிபதி ஒருவர் வரவே மாட்டார். எனவே, மாற்று வழியில் அரசியல் செய்யுங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

“சர்வதேச நாணய நிதியத்தின் வரைவுக்கமைய பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்.

அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திடப்படவில்லை. இது தொடர்பில் விரிவான பேச்சில் ஈடுபட்டுள்ளோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.