ஓடும் விமானத்தில் சீட் பெல்ட் அணியாமல் நின்ற பயணிகள்! அதிர்ச்சி வீடியோ வைரல் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம்!

விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும்போதே பயணிகள் இருக்கையில் அமராமல் நின்றுகொண்டிருக்கும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் பயணிகள் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

மானத்தின் உட்பகுதியை வீடியோவாகப் பதிவு செய்து ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்த வீடியோவில், விமானம் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் போது, பல பயணிகள் தங்கள் இருக்கைகளில் அமராமல் நின்றுகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

“விமானம் நகரும் போது பயணிகள் நின்றுகொண்டிருக்கிறார்கள். என்ன விதமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறது?” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது. அதில், “இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை ஆகும்.

விமானத்தின் அனைத்து இயக்கங்களும் உரிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் படியே மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற சூழல்களைக் கையாளவும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிசெய்யவும் எங்களது பணியாளர்கள் தகுந்த பயிற்சி பெற்றவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. விமான ஊழியர்கள் உடனடியாக பயணிகளை அமர வைக்கத் தவறிவிட்டதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே வேளையில், விமானம் ஓடுபாதையில் இருக்கும் போது இருக்கை வார்ப்புகளை அணிய வேண்டும் என்ற அடிப்படைப் பாதுகாப்பு விதிகளை பயணிகள் மீறுவதே இதற்குக் காரணம் என்றும், பயணிகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஊழியர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.