தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: 4 எம்.பி.க்கள் பயணம்
கேரளா – திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று (10) இரவு டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
குறித்த விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமானத்தில் நான்கு கேரள எம்.பி.க்கள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.
அதேவேளை கடந்த ஜுன் மாதம் 12 ஆம் திகதி நடந்த அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
