புங்குடுதீவில் கத்திக்குத்துத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மீது சரமாரியாககே கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்ட நபரைப் பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தாக்குதலாளி தப்பிச் சென்றுள்ளார்

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.