பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் நேற்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட 32 எதிரணி எம்.பிக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், இ.அர்ச்சுனா ஆகிய தமிழ் எம்.பிக்களின் கையொப்பங்களும் உள்ளன.
