யாழ். மாவட்ட அரச அதிபருடன் சிறீதரன் எம்.பி. நேற்று சந்திப்பு – மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பில் கேட்டறிவு.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டம், நெடுந்தீவின் வீதி புனரமைப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி, மாவட்ட அபிவிருத்தி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பான விவரங்களை அரச அதிபரிடம் சிறீதரன் எம்.பி. கேட்டறிந்து கொண்டார்.
