இனந்தெரியாத கும்பலால் ஆண் ஒருவர் படுகொலை!
சீதுவையில் இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த மேற்படி நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரியகஹலிந்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தச் சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை.
மேலும் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
